தஞ்சையில் புதிய 2000 ரூபாய் நோட்டுகள் ரூ. 7.85 கோடி பறிமுதல் செய்யப்பட்டது

Posted November 10, 2016 by Adiraivanavil in Labels:
தஞ்சை, 

தஞ்சையில் ரூ. 7.85 கோடி பறிமுதல் செய்யப்பட்டது, பறிமுதல் செய்யப்பட்ட பணம் புதிய 2000 ரூபாய் நோட்டுகள் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி லக்கானி கூறிஉள்ளார். 

தஞ்சை சட்டசபை தொகுதிக்கு வருகிற 19-ந் தேதி தேர்தல் நடைபெறுகிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாள் முதல் தொகுதியில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளன. மேலும், தேர்தலின்போது வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதை தடுப்பதற்காகவும், பரிசு பொருட்கள் வழங்குவதை தடுப்பதற்காகவும் தஞ்சையில் தேர்தல் பறக்கும்படை, கண்காணிப்புக்குழு, வீடியோ கண்காணிப்புக்குழு ஆகியவை நியமிக்கப்பட்டுள்ளது. இவர்கள் 24 மணிநேரமும் சுழற்சி முறையில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

 இவர்களுடன் போலீசாரும் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தநிலையில் புதுக்கோட்டை சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்ட பறக்கும் படையினர் ரூ. 7.85 கோடியை பறிமுதல் செய்தனர். இந்த பணத்தை எடுத்து சென்ற வாகனத்திற்கு முறையான ஆவணங்கள் இல்லை என்று தகவல்கள் வெளியாகியது. ஆர்.டி.ஒ.விடம் பறிமுதல் செய்யப்பட்ட பணம் ஒப்படைக்கப்பட்டது. இது தொடர்பாக விசாரிக்கப்பட்டதில் பாங்க் ஆப் பரோடா வங்கி ஏ.டி.எம்.மிற்கு எடுத்துச் செல்லப்பட்டது என்று தெரியவந்தது.

இந்நிலையில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி இது தொடர்பாக பேசுகையில், தஞ்சையில் ரூ. 7.85 கோடி பறிமுதல் செய்யப்பட்டது பாங்க் ஆப் பரோடா வங்கிற்கு சொந்தமானது. பறிமுதல் செய்யப்பட்ட பணம் புதிய 2000 ரூபாய் நோட்டுகள் என்று குறிப்பிட்டு உள்ளார். தொழில்நுட்ப கோளாறு என குறிப்பிட்ட அவர் ஆவணங்கள் இருப்பதால் விசாரணைக்கு பின்னர் ஒப்படைக்கப்படும் என்றார். 
நன்றி தினத்தந்தி



0 comment(s) to... “தஞ்சையில் புதிய 2000 ரூபாய் நோட்டுகள் ரூ. 7.85 கோடி பறிமுதல் செய்யப்பட்டது ”