அதிரை அருகே இன்று முதல் விசைப்படகு மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்

Posted November 28, 2016 by Adiraivanavil in Labels:
அதிராம்பட்டினம்,நவ.28
;கடந்த சில தினங்களாக ஐநூறு மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்ற அரசின் அறிவிப்பையடுத்து பணப்பரிமாற்றம் தடைபட்டதால் மீனவர்கள், மீன் வியாபாரிகள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகினர்.மேலும் மீனவர்கள் இரவு பகல் பாராது கஷ்டப்பட்டு பிடித்துவரும் மீன்களுக்கு உரிய விலைநிர்ணயிக்கப்படாமல் மிகக்குறைந்த விலைக்கே மீன்கள் வாங்கப்படுவதால் மீனவர்களுக்கு உழைப்பிற்கேற்ற வருமானம் இல்லை என்ற நிலை கடந்த 20 தினங்களாக நடைபெற்றுவருகிறது.இந்நிலையில் மல்லிப்பட்டினம் விசைப்படகு மீனவர்கள் சங்க நிர்வாகிகள் கூட்டம் மாநில மீனவர் சங்க செயலாளரும் கல்லிவயல்தோட்டம் விசைப்படகு சங்கத்தலைவருமான தாஜீதீன் தலைமையில் நடைபெற்றது.இதில் ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்ற அறிப்பால் பணப்பரிமாற்றம் செய்யமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.மேலும் இதனால் மீன்களுக்கு உரிய விலை நிர்ணயிக்கப்படவில்லை என்றும் இதனால் மீனவர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்வது என்று கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.இதையடுத்து தஞ்சை மாவட்ட கடல் பகுதியான சேதுபாவாசத்திரம்,மல்லிப்பட்டினம்,கல்லிவயல்தோட்டம் ஆகிய துறைமுகத்திலுள்ள 200க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மற்றும் இதன் மூலம் மீன்பிடிக்கும் 2000க்கும் அதிகமான மீனவர்கள் கடலுக்கு செல்லமாட்டார்கள்.இதனால் மீன்வரத்து குறைவதோடு மீன்களின் விலை பல மடங்கு உயரும் நிலை ஏற்படும் எனத் தெரிகிறது.




0 comment(s) to... “அதிரை அருகே இன்று முதல் விசைப்படகு மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்”