மத்திய/ மாநில அரசுகள், படித்த‍/ படிக்காத ஆண்/ பெண்ணுக்கு வழங்கும் அழகிய தொழில் கடன்கள்

Posted November 17, 2016 by Adiraivanavil in Labels:

மத்திய/ மாநில அரசுகள், படித்த‍/ படிக்காத ஆண்/ பெண்ணுக்கு வழங்கும் அழகிய தொழில் கடன்கள்!

மத்திய/ மாநில அரசுகள், படித்த‍/ படிக்காத ஆண்/ பெண்ணுக்கு வழங்கும் அழகிய தொழில் கடன்கள்!
வாழ்வில் கடின உழைப்பாலும், தொடர் முயற்சியாலும் முன்னேறத் துடி க்கும் படித்த, படிக்காத ஆண்/ பெண் அனைவருக்கும் பல கடனுதவித்
திட்டங்கள் உள்ளன. மத்திய, மாநில அரசுகள் இவர்களுக்குப் பல்வேறு கடன் திட்டங்கள் மூலம் உதவிகளை வழங்கி வருகின்றன. அவற்றில் சிலவற்றை இப்போது பார்ப்போம்…
கிராமப்புற பாரம்பரியத் தொழில்கள் மேம்பாட்டுக் கடனுதவித் திட்டம்
குறு, நடுத்தர தொழில் அமைச்சகத்தின்கீழ் இயங்கும் காதி கிராமத்தொழில் வாரியம், கயிறு வாரியம் ஆகியவை மற்றும் மத்திய/ மாநில அரசு வங்கிகள், கூட்டுறவு வங்கிகள், அரசு நிதி நிறுவனங்கள்/அரசு சாரா தொண்டு நிறுவன ங்கள் மூலம் பாரம்பரியத் தொழில்களுக்குக் கடன் மானியம் வழங்க இத்திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது
அனைத்துக்கிராமப்புற பாரம்பரியத்தொழில்களுக்கும் கடன் வழங்கப்பட்டாலும் மூலிகைப் பொருட்கள், தேன், கையால் தயாரி க்கும் பேப்பர், தோல் பொருட்கள், விவசாயம் சார் தொழில்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். இதன் மூலம் கிராமப்புறக் கைவினைஞர்கள், பெண் கள், கிராமத்தொழில் முனைவோர்கள் பயன் பெறு வர். அவர்கள் குழுமங்கள் தொடங்கவும் உதவி செய்யப்படும்.
பயிற்சி, திறன் மேம்பாடு, மார்க்கெட்டிங், கருத்தரங்குகள் என பல உதவி களை அளிக்கின்றனர். காதி கிராமத் தொழில்களு க்கு கடன், மானியம் பெற KVIC எனப்படும் Khadi Village Industries Commission மற்றும் கயிறு சார் தொழில்களுக்குக் கயிறு வாரியத்தை அணுகி கடன், மானியம் போன்ற உதவிகள் ெபறலாம்.
முழு விவரம் அறிய:
மேலும் இது பற்றிய திட்டம், நடைமுறைகள் பற்றி விவாதிக்க:
State Office: Khadi & Village Industries Commission, 
236, Avvai Shanmugham Road, Gopalpuram, 
Tamil Nadu, Chennai-600 086 
Phone: 044-28351019
சணல் தொழில் மேம்பாட்டுத் திட்டங்கள்
சணல் இன்று பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக பயன்படத்தொடங்கி யுள்ளது. இதற்காக மத்திய அரசு சணல் பொருட்கள் தயாரி ப்பை ஊக்கப் படுத்தும் வகையில் பல்வேறு கடன் திட்டங் களை வழங்கி வருகிறது.
சணல் உற்பத்தி, தர உயர்வு, புதிய கண்டு பிடிப்புக ள், திறன் மேம்பாடு, மார்க்கெட்டிங் வசதி, புதிய இயந்திரங்கள் வாங்கக் கடன், பழைய இயந்திரங் களை மாற்ற உதவி, ஏற்றுமதி செய்ய உதவி என பல நோக்கங்களுக்காக ‘சணல் தொழில்நுட்ப மேம்பாட்டுத் திட்டம்’ (Jute Technology Mission) என்ற திட்டத்தைக் கொண்டு வந்துள்ளது.
சணல் பொருட்கள் தயாரிப்பில் ஊழியர்களுக்கும், மேற்பார்வையாளர்க ளுக்கும் பயிற்சி, இயந்திரங்கள் வாங்க மானியம், அரசு சாரா தொண்டு நிறுவனங்களுக்கு உதவி, புதிய தொழில்நுட்பம், மார்க்கெட்டிங் செய்ய நிதி உதவி ஆகியவற்றோடு இலவச மானியமும் வழங்கப்படுகிறது.
மேலும் இந்திய அரசின் சணல் சார்ந்த பல துறைகளும் இத்திட்டத்திற்கு உதவுகின்றன. உதாரணமாகச் சணல் விவசாயிக ளுக்கு உதவிகள் தொடங்கி, பயிற்சி, உற்பத்தி, விளம்பரம் உள்ளிட்ட பல்வேறு வகையில் பல திட்டங்களை கல்கத்தா ஜூட் வளர்ச்சி இயக்குநர கம் நடைமுறைப்படு த்துகிறது.
முழு விவரங்கள் அறிய:
மேலும் இதுபற்றிய திட்டம், நடைமுறைகள் பற்றி விவாதிக்க:
Dr. K. Manoharan, 
Director, Directorate of Jute Development, 
Government of India, 
Ministry of Agriculture, 
Department of Agriculture & Cooperation, 
Nizam Palace, Kolkata-700020 
Phone: 033-22879465/9337/9189
பெண்கள் மேம்பாட்டுக்கான நிறுவனம் வழங்கும் கடனுதவிகள்
2007ம் ஆண்டு குஜராத்தில் சிறிய அளவில் அறக்கட்டளையாகத் தொடங் கப்பட்ட இந்நிறுவனம், சுமார் 50 லட்சம் பெண்க ளுக்கு இந்தியா முழுவதும் உதவிசெய்து வருகிற து. பெண் குழந்தைகளுக்குப் பாதுகாப்பு தொடங்கி அவர்களுக்கு ஆடல்பாடல், ஃபேஷன் டிசைனிங் பயிற்சிவரை தந்து வாழவைக்கிறது. பல சுய தொழில் பயிற்சிகளை அளித்து மைக்ரோ ஃபைனான்ஸ் (சிறு, குறு கடன்கள்) வழங்குகிறது.
இலவச இயந்திரங்களை பெண்களுக்கு வழங்குதல், தயாரிப்புப் பயிற்சி, விற்பனைக்கு உதவி என பல உதவிகள் செய்கிறது. கல்வித் திட்டங்கள், பயிற்சி, சுகாதாரம், பொருளாதா ரம், அரசியல் ஆகிய துறைகளில் பெண்களை முன் னேற்றுகிறது. இந்நிறுவனம் சிறு/குறு கடன் வழங்கு வது மட்டுமல்ல, மத்திய அரசின் பல பொருட்கள் வாங்க கடன், R.M.K. எனப்படும் ராஷ்ட்ரீய மகிளா கோஷ் கடன் திட்டம் செயல்படு த்தப்படுகிறது.
சுயஉதவிக்குழுக்களை நிர்வாகம்செய்து, அவர்களை குரூப் ஆலோசனை யில் ஈடுபடுத்தி, எதிர்காலத்தில் சிறுதொழில் அதிபர்களாக மாற்றி வருகிறது. கருத்தரங்குகள் நடத்துதல், புத்தகம், பத்திரிகை வெளியிடுதல், பெண்களைப் பொது அறிவுமிக்கவர்களாக மாற்று தல் எனப் பல சேவைகளைச் செய்து வருகிறது. இந்தியா முழுவதும் உள்ள பெண்கள் இந்நிறுவன த்தில் உறுப்பினர் ஆகி உதவிகள் பெறலாம்.
முழு விவரங்கள் அறிய:
www.wecindia.org 
Women Empowerment Corporation, 
Regd.Off: Celler, Shreeji House, Ellisbridg, 
Ahmedabad-380 006, 
Gujarat Office (H.O.) 7, Ground Floor, 
Surya Complex, BhulatiaPore, Cross Road, 
Ahmedabad – 380 028. 
Gujarat Phone: 079 – 25324740
===> எம்.  ஞானசேகர், குங்குமச்சிமிழ்


0 comment(s) to... “மத்திய/ மாநில அரசுகள், படித்த‍/ படிக்காத ஆண்/ பெண்ணுக்கு வழங்கும் அழகிய தொழில் கடன்கள்”