காலையில் செய்த மேக் அப் இரவு வரை கலையாமல் அழகாய் இருக்க சில குறிப்புக்கள்
Posted November 10, 2016 by Adiraivanavil in Labels: அழகு குறிப்பு
நாம் போட்டு இருக்கும் மேக் அப் கலைந்து விடாமல் நம்மை அழகாய் காட்ட
வேண்டும். அழகாய் காட்டுவதற்கு நாம்போட்டு இருக் கும் மேக் அப் கலையாமல் பாதுகாக்க வேண்டும். மேக் அப் போடும்போது அதிகமாகி விட்டாலும் அதனை திருத்தமாக போடுவதில்தான் இருக்கிறது அழகின் ரகசியம். மேக்அப்போட ஆரம்பிக்கும்போதே போதுமா ன அளவில் மேக் அப்செய்து கொள்ளவேண்டும். மேக் அதிகமாக போட்டுவிட்டோமே என் று நினைப்பவர்கள் சிறிதளவு பஞ்சு எடுத்து அதிகமுள்ள இடங்களில் துடைக்கவும், அந்த இடத்தில் காம்பாக்ட் பவுடர் போட்டு அட்ஜஸ்ட் செய்ய வேண்டும். அதிகப்படியான மேக் அப் செய்திருந்தால்
அதனை சரிசெய்ய பேஷியல் கிளன்சர் சிறந்த பொருளா கும்.

அதிகமாக இருக்கும் இடங்களில் கிளன்சர் போட்டு கழு வலாம். கன்னத்தி ல் அதிகமாக ரூஜ் அப்பிவிட்டால் பஞ்சு எடுத்து கன்னங்களில் உருட்டி விட்டு சிறிதளவு காம் பாக்ட் பவுடர் போட்டு அட்ஜஸ்ட் செய்யலாம்.
இவ்வாறு செய்தால் லிப்ஸ்டிக் அதிகமாக போட்டது போல தெரியாது.
பண்டிகை, திருவிழா மற்றும் பார்ட்டிகளை முடித்துக் கொண்டு வீடு திரும்பிய பின்னர், தூங்கச் செல்வத ற்கு முன்பாக மேக்கப்பை நன்றாக கழுவி விடவும்.

இதனால் சருமத்தின் இயல்புத்தன்மை பாதுகாக்கப் படும். மேக் அப் போட்டபடியே தூங்குவது சருமத்திற் கு பாதிப்பை ஏற்படுத்தும்.
எனவே சருமத்தைப் பற்றி கவலைப்படுபவர்கள் மேக் அப் கலைத்து
விட்டு தூங்குவது பாதுகாப்பானது என் கின்றனர் அழகியல் நிபுணர்கள்.
மேக்கப்பை கழுவி சுத்தம் செய்யும் போது மிகவும் கவன மாக செயல்பட வேண்டும். இல்லாவிட்டால் முகத்தில் கரும் புள்ளிகள் ஏற்பட்டு விடும்.
குறிப்பாக கண்களைச் சுற்றியிருக்கும் மேக்கப்பை கலை ப்பதற்கு பேபி ஷாம்புவை பயன்படுத்துவது சிறந்ததாகும்.
இதன்பின்னர் தூங்கினால் நன்றாக தூக்கமும்வரும் அழகும் பாது காக்கப்படும்.
.
=> பர்மா சுபைதா
0 comment(s) to... “காலையில் செய்த மேக் அப் இரவு வரை கலையாமல் அழகாய் இருக்க சில குறிப்புக்கள்”