அதிராம்பட்டினம் அருகே; விசைப்படகு; மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கச்செல்லவில்லை
Posted November 15, 2016 by Adiraivanavil in Labels: அதிரை வானவில்
அதிராம்பட்டினம்;, நவ.15-
- தஞ்சை மாவட்டம் கடற்பகுதியான அதிராம்பட்டினம் அருகே உள்ள சேதுபாவாசத்திரத்தில் பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாத காரணத்தினாலும் புதிய ரூபாய் நோட்டுகள் கிடைப்பதில் பெரும் சிரமங்கள் இருப்பதினாலும் மீன் வியாபாரம் பெரிதும் பாதிப்படைந்துள்ளதால் சேதுபாவாசத்திரம் விசைப்வபடகு மீனவர்கள் கடலுக்கு செல்வது இல்லை என முடிவு செய்துள்ளனர். மத்திய அரசு பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என அறிவித்ததை தொடர்ந்து மீனவர்கள் மீன் விற்று பணம் பெற முடியாது நிலை ஏற்பட்டுள்ளதால் மீனவர்கள் மற்றும் மீன் வியாபாரிகள் மிகுந்த சிரமம் அடைந்துள்ளனர். கடலில் இருந்து பிடித்து வரும் மீன்களை மீனவர்களுக்கு விற்கும் போது வியாபாரிகள் பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளையே கொடுக்கின்றனர். இந்த பழைய ரூபாய் நோட்டுகளை மீனவர்கள் உடனடியாக மாற்ற முடியவில்லை. அதே வேலையில் மீனவர்களுக்கு புதிய ரூபாய் நோட்டுகளை கொடுத்து வாங்குவதற்கு ஏதுவாக வியாபாரிகளிடமும் புதிய நோட்டுகள் கிடைப்பதில் சிரமம் உள்ளது. இதனால் மீன் வியாபாரம் பெரிதும் பாதிப்படைந்துள்ளது. இதனை தொடர்ந்து சேதுபாவாசத்திரம் பகுதியை சேர்ந்து சுமார் 100 க்கும் மேற்பட்ட விசைப்படகு மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு செல்வதில்லை என முடிவு செய்துள்ளனர்.
0 comment(s) to... “அதிராம்பட்டினம் அருகே; விசைப்படகு; மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கச்செல்லவில்லை”