கும்பகோணத்தில் கண்டன பொதுக் கூட்டத்தில் அதிரையினர் பங்கேற்ப்பு
Posted November 27, 2016 by Adiraivanavil in Labels: ஷம்சுல் இஸ்லாம் இளைஞர் சங்கம்
அதிராம்பட்டினம்,நவ.27
பொது சிவில் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறை வேற்றவேண்டு மென அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள் தீர்மானம் நிறை வேற்றியது.
தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் மாவட்ட ஜமா அத்துல் உலமா சபை, அனைத்து பள்ளிவாசல் ஜமாஅத், அனைத்து இஸ்லாமிய இயக் கங்கள் சார்பில் பொது சிவில் சட்டத்தை எதிர்த்து கண்டன பொதுக் கூட்டம் நேற்று நடந்தது. தமிழ் மாநில ஜமா அத்துல் உலமா சபை தலைவர் அப்துர்ரஹ்மான் தலைமை வகித்தார்.
கூட்டத்தில் பொது சிவில் சட்டத்தை அமல் படுத்த மத்திய அரசு முயலும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறை வேற்ற வேண்டும். பள்ளி வாசல், தர்ஹாக்களில் பொருத்தப்பட்டுள்ள கூம்பு வடிவ ஒலி பெருக்கியை அகற்ற முயற்சி செய்யும் காவல் துறையின் நடவடிக்கையை தடுத்து நிறுத்த வேண்டும் .காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வேண்டும். ரூ.500, 1000 செல்லாது என்ற அறிவிப்பை திரும்ப பெற வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.
இந்திய யூனியன் முஸ்லிம்லீக் மாநில தலைவர் காதர் மொய்தீன், தமிழ் மாநில ஜமா அத்துல் உலமா சபை பொது செயலாளர் முஹம்மது ரிழா மற்றும் அதிராம்படடினம் இஸ்லாமியர்கள் உள்பட பல்வேறு இஸ்லாமிய இயக்கத்தினர் பலர் பங் கேற்றனர்.
0 comment(s) to... “கும்பகோணத்தில் கண்டன பொதுக் கூட்டத்தில் அதிரையினர் பங்கேற்ப்பு ”