அதிரையில் சம்சுல் இஸ்லாம் சங்க இளைஞர் அமைப்பு சிறப்பு பொதுக்குழு கூட்டம்
Posted November 23, 2016 by Adiraivanavil in Labels: ஷம்சுல் இஸ்லாம் இளைஞர் சங்கம்
அதிராம்பட்டினத்தில் சங்க கூட்ட அரங்கில் சம்சுல் இஸ்லாம் சங்க இளைஞர் அமைப்பு (SISYA) சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.
இளைஞர் அமைப்பின் தலைவர் S.அஹமது அனஸ் தலைமை தாங்கினார். துணைதலைவர்
K.மரைக்கா இத்ரிஸ் அகமது செயலாளர் M.F.சலீம் இணைசெயலாளர் Z.முஹம்மது தம்பி பொருலாளர் A.சேக்அலி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் எதிர் வரும் டிசம்பர் மாதம் மாணவர்களுக்கான கல்வி வழிகாட்டி முகாம் நடத்துவது குறித்து தீர்மானங்கள் மற்றும்
பொது சிவில் சட்டத்தை எதிர்த்து கண்டன பொதுக்கூட்டம் கும்பகோணத்தில் வரும் 26-11-2016 அன்று சனி கிழமை மாலை-5 மணிக்கு நடைபெறவுள்ளது. இந்த பொதுக்கூட்டத்தில் திராளக கலந்து கொள்வதற்கான முன்ஏற்பாடு குறித்தும் தீர்மானங்கள் நடைபெற்றது.
0 comment(s) to... “அதிரையில் சம்சுல் இஸ்லாம் சங்க இளைஞர் அமைப்பு சிறப்பு பொதுக்குழு கூட்டம்”