அதிரை அருகே அதிமுக பிரமுகர் இல்ல திருமண விழா அமைச்சர் பங்கேற்பு
Posted March 21, 2016 by Adiraivanavil in Labels: அதிரை வானவில்
அதிராம்பட்டினம் அருகே உள்ள புதுக்கோட்டை உள்ளுர் கிராமத்தில் வசிப்பவர் பி.சுப்பிரமணியன் இவர் பட்டுக்கோட்டை அதிமுக ஒன்றிய செயலாளராக இருந்து வருகிறார். இவரது மகன் ஸ்ரீகாந்த்க்கும், மதுக்கூர் வடக்கு கிராமத்தில் வசிப்பவர் மு.பாலு இவரது மகள் ஷீலாவுக்கும் இன்று (20ந் தேதி) காலை 11.30 மணியளவில்,பட்டுக்கோட்டை அய்யா திருமண மண்டபத்தில் திருமணம் நடைப்பெற்றன.
இந்த திருமணத்தை வீட்டு வசதி நகர்புறம் மற்றும் வேளாண்மை துறை அமைச்சர் ஆர்.வைத்திலிங்கம் தலைமை ஏற்று தாலியை மணமகனுக்கு எடுத்துக்கொடுத்து மணமகளுக்கு கட்டினர்.
இந்நிகழ்ச்சியில், தஞ்சை பாராளுமன்ற உறுப்பினர் பரசுராமன், தஞ்சை மேயர் சாவித்திரிகோபால், தஞ்சை சட்டமன்ற உறுப்பினர் ரெங்கசாமி, திருவையாறு சட்டமன்ற உறுப்பினர் ரெத்தினசாமி, பாபநாசம் சட்டமன்ற உறுப்பினர் துரைக்கண்ணு, பால்வளத்துறை தலைவர் காந்தி, பட்டுக்கோட்டை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பி.என்.ராமச்சந்திரன், பட்டுக்கோட்டை நகர் மன்ற தலைவர் ஜவஹர்பாபு, மதுக்கூர் ஒன்றிய கழக செயலாளர் துரைசெந்தில், முன்னாள் தஞ்சை மாவட்ட கழக செயலாளர் இரா.கார்த்திகேயன் பட்டுக்கோட்டை நகர செயலாளர் ராஜேந்திரன், தஞ்சை மாவட்ட ஒன்றியப் கழக செயலாளர்கள், தொகுதி கழக செயலாளர்கள், பேரூராட்சி, ஊராட்சி, நிர்வாகிகள் அனைத்து கட்சி பிரமுகர்கள் கலந்துக்கொண்டனர்.
0 comment(s) to... “அதிரை அருகே அதிமுக பிரமுகர் இல்ல திருமண விழா அமைச்சர் பங்கேற்பு”