கடுமையான வெப்பத்திலும் முத்துப்பேட்டை அலையாத்தி காடுக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை குறையவில்லை.

Posted March 30, 2016 by Adiraivanavil in Labels:
முத்துப்பேட்டை மார்ச் - 30
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அலையாத்திக்காடு ஆசியா கண்டத்திலேயே அது மிகப்பெரிய பரபரபளவுக் கொண்ட காடாகும். இந்த காட்டின் அழகை ரசிக்க ஆண்டு முழுவதும் பல்வேறு பகுதியிலிருந்து சுற்றுலா பயணிகள் தொடர்ந்து வந்து செல்கின்றனர். இந்த நிலையில் அலையாத்திக்காடுகளுக்கு சுற்றுலா பயணிகள் செல்லும் ஆற்றின் வழியே இருபுறமும் அடர்ந்து படர்ந்து கிடக்கும்
அலையாத்தி காடுகளின் இயற்கை அழகும் அதே போல் லகூன் பகுதியில் உள்ள குட்டிக்குட்டி தீவுகளின் அழகும், ஆங்காங்கே தென்படும் பறவைகளின் கூச்சல் சத்தமும் சுற்றுலா பயணிகளை மிகவும் கவர்ந்துள்ளது. இந்த நிலையில் தற்பொழுது தமிழகத்தில் கடுமையான வெப்பம் அக்னி நட்சத்திரத்திற்கு முன்பாகவே அதிகரித்துள்ளது. இதனால் திருவாரூர் மாவட்டத்திலும் வெயில் தாக்கம் ரொம்பவே அதிகமாக உள்ளது. இருந்தாலும் முத்துப்பேட்டை அலையாத்தி காட்டுக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை குறையவில்லை. இந்த நிலையில் நேற்று பல்வேறு மாவட்டங்களிலிருந்து பல்வேறு அமைப்பைச் சேர்ந்தவர்களும், அரசு அலுவலர்கள் உட்பட அதிகளவில் சுற்றுலா பயணிகள் வந்து சென்றனர். தற்பொழுது கடும் வெப்பத்திலும் சுற்றுலா பயணிகளின் வரத்து அதிகரித்துக் கொண்டு இருப்பதால்; ஆசாத்நகர் மற்றும் ஜாம்புவானோடை படகு துறையில் சுற்றுலா பயணிகளை ஏற்றுவதற்காக தனியார் மீன்பிடி படகுகள் அணிவகுத்து நிற்கிறது.
படம் செய்தி:மு.முகைதீன்பிச்சை
முத்துப்பேட்டை


0 comment(s) to... “கடுமையான வெப்பத்திலும் முத்துப்பேட்டை அலையாத்தி காடுக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை குறையவில்லை.”