அதிராம்பட்டினத்தில் கோவில் கும்பாபிஷேகம் திரளான பக்தர்கள் கலந்துக்கொண்டு சாமி தரிசனம்

Posted March 20, 2016 by Adiraivanavil in Labels:
  அதிராம்பட்டினத்தில் அருள்மிகு துர்க்கா செல்லியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் நடைப்பெற்றன. கடந்த 14ந் தேதி பங்குனி
மாதம் முதல் தேதி மாலை 6 மணிக்கு தேவதா பூஜைகள் தொடங்கி, நேற்று (18ந்) தேதி காலை 10.30 மணிக்கு கும்பத்தில் சிவாச்சாரிகள் புனித நீர் ஊற்றினார்கள். வானத்தில் கருடாழ்வார் வட்டமிட்டு பக்தர்களுக்கு அருள் புரிந்தார். அப்போது பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். அதனைத் தொடர்ந்து பொது மக்களுக்கு புனித நீர் ஊற்றினார். இதற்கான ஏற்ப்பாடுகளை திருப்பணிக்குழு தலைவர் துரைபாஞ்சாலன், நிர்வாக அதிகாரி சரவணன் தக்கார் முருகேசன் செய்திருந்தனர். விழாவின் முடிவில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டன.






0 comment(s) to... “அதிராம்பட்டினத்தில் கோவில் கும்பாபிஷேகம் திரளான பக்தர்கள் கலந்துக்கொண்டு சாமி தரிசனம் ”