அதிரை அருகே கோடை மழையினால் அறுவடை செய்த நெல் எல்லாம் பாதிப்பு

Posted April 08, 2016 by Adiraivanavil in Labels:
அதிராம்பட்டினம்அருகே உள்ள பள்ளத்தூர் தஞ்சை மாவட்டத்தின் கடைமடை பகுதியாகும். பாசனத்திற்கு திறந்துவிடப்படும் தண்ணீரும் கடைசிகட்டமாக தான் இந்த பகுதிக்கு வந்து சேரும் அதனால் விவசாய அறுவடைகாலமும் மற்ற பகுதிகளை விட தாமதமாகவே செய்யக்கூடிய சூழ்நிலை இவர்களுக்கு ஏற்படுகிறது. இந்நிலையில் அரசு நெல் கொள்முதல் நிலைய அதிகாரிகள் நெல்லை கொள் முதல் செய்ய காலதாமதம் செய்வது மட்டுமல்லாமல் பணம் பட்டுவாடாவிற்கும் மாத கணக்கில் அலையவிடுவதாக விவசாயிகள் கூறுகின்றனர். இந்நிலையில் பள்ளத்தூர் கிராமத்தில் உள்ள அரசு நெல் கொள்முதல் நிலையத்தில் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக கொள்முதல் செய்வதற்காக கொட்டப்பட்ட நெல்லை அதிகாரிகள் பெற்றுக்கொள்ளாமல் தமதப்படுத்தியதோடு போதுமான அளவு நெல் கொள்முதல் செய்யப்பட்டுவிட்டது, இது தாங்களாக பார்த்து போனால் போகட்டும் என உங்களுக்கு போனஸ் வழங்குவது போல தான் பாவப்பட்டு பெற்றுக்கொள்கின்றோம் என விவசாயிகளிடம் கூறுவதாக விவசாயிகள் வேதனை படுகின்றனர். இந்நிலையில் தற்போது அதிகாரிகளின் அலட்சியத்தினாலும் , தாமதத்தினாலும் 2500 மூட்டைக்கும் மேற்பட்ட நெல்கள் தேங்கியிருந்த நிலையில் இன்று காலை தீடீர் என பெய்த கோடைமழையினால் நெல் எல்லாம் நனைந்து ஈரமாகிவிட்டது. இந்நிலையில் நெல் அதிக ஈரப்பதமாக இருப்பதாக கூறி அதிகாரிகள் விலையை குறைத்து நெல்லை கொள்முதல் செய்ய வாய்ப்பு இருக்கிறது என்றும், அல்லது மீண்டும் தாமதப்படுத்தும் நிலையில் இந்த நெல் எல்லாம் முளைத்து வீணாக போகவும் வாய்ப்பு இருப்பதாக விவசாயிகள் கூறினர். இந்நிலையில் இந்த பகுதி விவசாயிகள் எதிர்வரும் 11 ம்தேதிக்குள் தேங்கியிருக்கும் நெல்லை கொள்முதல் செய்யாத பட்சத்தில் விவசாய சங்கங்களுடன் இணைந்து பெரிய அளவில் போராட்டம் நடத்தவும் திட்டமிட்டுள்ளனர்.
செய்தி படங்கள் பட்டுக்கோட்டை




0 comment(s) to... “அதிரை அருகே கோடை மழையினால் அறுவடை செய்த நெல் எல்லாம் பாதிப்பு”