அதிராம்பட்டினத்தில் துரௌபதையம்மன் தீ மிதி திருவிழா
Posted April 11, 2016 by Adiraivanavil in Labels: அதிரை வானவில்
அப்போது தீயின் குழியில் இருந்து
மேற்கு நோக்கி அருள்மிகு துரௌபதை
அம்மன் பார்வையில் பக்தர்கள் தங்கள் குழந்தைகளுடன் தீயில்
இறங்கினார்கள்.இவர்களுக்கு எந்தவித பாதிப்பும் வராமல்
இருக்க கிராமத்தின் செலவில் தீ பள்ளத்தை
சுற்றி பலகையால், பாதுகாப்பு வளையம் அமைத்தனர். நிர்வாகிகள்
தலைமையில் ஒவ்வொரு பக்தர்களாக தீயில்
இறங்கினார்கள்.
இந்த தீயில் இறங்கும் சம்பவம்
பட்டுக்கோட்டை வட்டத்தில் பெரிய அளவில் ஒவ்வொரு
ஆண்டும் நடைப்பெறுவது வழக்கம் இதனை முன்னிட்டு
அதிராம்பட்டினம் அருகே உள்ள வள்ளிக்கொல்லைக்காடு
முடுக்குக்காடு கரிசைக்காடு மறவக்காடு நரசிங்கபுரம் மற்றும் சுற்று வட்டார
பகுதியில் இருந்து நிறைய பேர்கள்
வந்திருந்தனர். இதில் 1000 பக்கதர்கள் தீயில் இறங்கினார்கள்.

0 comment(s) to... “அதிராம்பட்டினத்தில் துரௌபதையம்மன் தீ மிதி திருவிழா ”