பட்டுக்கோட்டை தொகுதியில் 67 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை-சார் ஆட்சியர் தகவல்
Posted April 10, 2016 by Adiraivanavil in Labels: பட்டுக்கோட்டை
பட்டுக்கோட்டை,ஏப்.10:
பட்டுக்கோட்டையில் 67 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என சார் ஆட்சியர் தெரிவித்தார்.
பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் தேர்தல் சம்மந்த மான விதிமுறைகள் குறித்து சார் ஆட்சியர் ராஜசேகர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியின் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 2,26,518. இதில் ஆண்கள் 1,09,221, பெண்கள் 1,17,279, மூன்றாம் பாலினத்தவர் 18 பேர். பட்டுக்கோட்டை சட்ட மன்றதொகுதியில் 254 வாக்குச்சாவடிகள் அமைக்கப் பட்டுள்ளது. பட்டுக்கோட்டை சட்ட மன்றதொகுதியில் 27 இடங்களில் 67 பதற்றமான வாக்குச்சாவடிகள் என கண்டறியப்பட்டுள்ளது. இது வரை கட்சிகள் சம்மந்த மாக 718 தேர்தல் நடத்தை விதி மீறல் புகார்கள் வரப்பெற்றுதக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பட்டுக்கோட்டை, மதுக்கூரில் 2 தேர்தல் புகார்கள் சம்மந்தமாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அரசியல் கட்சியினர் தேர்தல் சம்மந்தமாக குறிப்பாக பொதுக்கூட்டம், வாகன அனுமதி உள்ளிட்ட அனைத்திற்கும் 48 மணி நேரத்திற்கு முன் ஆன் லைன் மூலமாக அனு மதி பெற வேண்டும். மேலும் பட்டுக்கோட்டை சட்ட மன்ற தொகுதிக்குள் 137 இடங்களில் பொதுக்கூட்டங்கள் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதில் பட்டுக்கோட்டையில் மணிக்கூண்டு, அறந்தாங்கி ரோடு முக்கம், தலைமை தபால் நிலையம், சாமியார் மடம், பேருந்து நிலையம், பயணியர் மாளிகை, என 7 இடங்களிலும் பொதுக் கூட்டங்கள் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இது வரை பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதிக் குட்பட்ட பகுதிகளில் உரிய ஆவணம் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட 2 லட்சத்து 330 ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டு அரசு கருவூலத்தில் செலுத்தப்பட்டுள்ளது. தேர்தல் சம்மந்த மான புகார்களுக்கு பட்டுக்கோட்டை சட்ட மன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும், சார் ஆட்சியருமான ராஜசேகர், உதவி தேர்தல் நடத்தும் அலுவலரும், தாசில் தாருமான குரு மூர்த்தி ஆகியோரை 04373-236305 என்ற தொலை பேசி எண்ணில் தொடர்பு கொண்டு புகார் களை தெரி விக் க லாம். மேலும் மேற் படி இரண்டு அலுவலர்களுக்கும் தனித்தனியாக கட்டுப்பாட்டு அறைகள் உள்ளது. தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் பேரில் பட்டுக்கோட்டை சட்ட மன்ற தொகுதியில் உள்ள மாற்றுத்திறனாளிகள் வாக்களிப்பதற்கு ஏதுவாக 632 சக்கரநாற்காலிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பட்டுக்கோட்டை சட்ட மன்ற தொகுதியில் அணைக் காடு, வீரக்குறிச்சி, ராஜாமடம், முசிறி ஆகிய 4 இடங்களில் மாதிரி வாக்குச்சாவடிகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதே போல் முதல்சேரியில் அனைத்து மகளிர் வாக்குச் சாவடியும் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. அனைத்து மகளிர்வாக்குச்சாவடி என்பது வாக்களிக்க வரும் வாக்காளர்களை தவிர அதாவது வாக்குச்சாவடி அலுவலர்கள், பூத் ஏஜெண்டுகள், பெண் காவலர்கள் என அனைவரும் மகளிர்களை கொண்டு இயங்கக்கூடிய வாக்குச்சாவடி அமைக்கவும் திட் ட மி டப் பட் டுள் ளது. இந்த சட் ட மன்ற தேர் தல் அமை தி யாக நல்ல முறையில் நடை பெற அனைத்து அரசியல் கட்சியினரும், அனைத்து வாக்காளர்களும் முழு ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றார்கள் என் றார்.
சார் ஆட்சியர் தகவல்
ÜFó£‹ð†®ùˆF™
0 comment(s) to... “பட்டுக்கோட்டை தொகுதியில் 67 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை-சார் ஆட்சியர் தகவல்”