200 மில்லியன் வருடங்கள் பழமையான அரிய வகை மீன் கண்டுபிடிப்பு!

Posted August 28, 2014 by Adiraivanavil in Labels:
200 மில்லியன் வருடங்கள் பழமையான அரியவகை மீன் இனம் ஒன்று அண்மையில் நீருக்கடியில் காணப்படும் குகை ஒன்றினுள் உயிருடன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது மேற்கு பசுபிப்மாநிலப்பகுதியில்
காணப்படும் தீவுப்பகுதியில் அமைந்த கடலில் சுமார் 35 மீற்றர் ஆழத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பளுப்பு அல்லது பிறவுண் நிறத்தில் ஈல் மீன் போன்று கண்டுபிடிக்கப்பட்ட இந்த மீன் இனம் பற்றி கருத்து தெரித்த ஆய்வாளர்கள்:
இவ்வகை மீன்களை கிட்டத்தட்ட 19 குடும்பங்களாக பிரிக்க முடியும் எனவும் இதில் 819 இனங்கள் இருப்பதாகவும் தெரிவித்தனர். இதே போன்றுதான விலாங்கு மற்றும் ஈல் மீன் இனங்கள் காணப்படுவதாக குறிப்பிட்டார்.
இதற்கு முன்னைய காலப்பகுதியிலும் இவ்வாறான மீன் இனங்கள் பற்றிய ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவித்த அவர்கள் இது பற்றியும் ஆய்வுகளை மேற்கொண்டிருப்பதாக தெரிவித்தார்கள்.


0 comment(s) to... “200 மில்லியன் வருடங்கள் பழமையான அரிய வகை மீன் கண்டுபிடிப்பு!”