பட்டுக்கோட்டை அருகே கணவன்–மனைவி தற்கொலை

Posted August 29, 2014 by Adiraivanavil in Labels:

 பட்டுக்கோட்டை அருகே உள்ள காயாவூர் கிராமத்தை சேர்ந்தவர் சுப்பையன். இவர் லெட்சதோப்பு பகுதியில் தங்கி சவ ஊர்வலத்திற்கு பயன்படும் ஐஸ் பாக்ஸ் மற்றும் வாகனங்களை வாடகைக்கு விடும் தொழில் செய்து
வந்தார்.

நேற்று சுப்பையனும் அவரது மனைவி அமிர்தவள்ளியும் விஷம் சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
இவர்களுக்கு இரண்டு மகன்கள், ஒரு மகள் இருக்கிறார்கள். ஒரு மகன் வெளிநாட்டில் வேலை பார்க்கிறார். ஒரு மகன் சென்னையில் வேலை பார்க்கிறார். மகள் நாமக்கல்லில் படித்துவருகிறார். நேற்று மாலை ஏதோ போன் வந்ததாகவும் அதனை கேட்டதும் அமிர்தவள்ளி அதிர்ச்சியில் தன்னை மாய்த்துக்கொண்டதாக தனது மகன்களுக்கு சுப்பையன் தகவல்தெரிவித்ததாக கூறப்படுகிறது.
அதனை தொடர்ந்து அவரது மருமகள் வந்து பார்த்தபோது சுப்பையனும் தற்கொலைசெய்து கொண்டிருந்தார்.
இந்த சம்பவம் இந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவர்களின் தற்கொலைக்கு காரணம் என்ன? என்பது குறித்து பட்டுக்கோட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.நன்றி மாலைமலர் 



0 comment(s) to... “பட்டுக்கோட்டை அருகே கணவன்–மனைவி தற்கொலை”