திருவரங்குளத்தைச் சேர்ந்த பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் மூன்று குழந்தைகள்

Posted August 01, 2014 by Adiraivanavil in Labels: ,
ஆலங்குடி அருகேயுள்ள  திருவரங்குளம் கேவிஎஸ் நகரைச்  சேர்ந்த பெண்ணுக்கு 
ஒரே பிரசவத்தில் மூன்று குழந்தைகள் பிறந்துள்ளன. திருவரங்குளம்  கேவிஎஸ் நகரைச்  சேர்ந்த ரகுமான்கான்  மனைவி மெஹரிபா (22). இவர்களுக்கு முதல் பிரசவத்தில் ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இப்போது அந்தக் குழந்தைக்கு ஐந்து
வயதாகிறது. இந்நிலையில் இப்போது கர்ப்பமுற்ற மெஹரிபாவிற்கு மூன்று குழந்தைகள் கருத்தரித்திருந்தது.  அதனைத் தொடர்ந்து கண்காணித்து கண்ணும் கருத்துமாகப் பராமரித்து வந்தனர். ஏற்கனவே சுகப்பிரசவம் என்பதால் தைரியமாக இருந்தனர். இந்நிலையில் இன்று  காலை 7.20 மணிக்கு மெஹரிபா பிரசவமானார். அப்போது  2.300-கிலோ எடையுள்ள இரண்டு ஆண் குழந்தைகளும் 1.800-கிலோ எடையுள்ள ஒரு பெண் குழந்தையும் பிறந்தன. இந்தப் பிரசவம் புதுக்கோட்டை செந்தில் மருத்துவ மனையில் நடந்தது. மெஹரிபாவிற்கு முதல் பிரசவமும் தொடர்ந்து மருத்துவமும் செய்து வந்த மருத்துவர் சுகன்யா ஜெயலெட்சுமி, மருத்துவர்கள் திலகவதி, செந்தில்அருண், சுப்பையா, இந்து பிரியதர்ஷினி ஆகியோர் உதவியுடன் இப்பிரசவம் நடந்தது. குழந்தைகள் மூவரும் ஆரோக்கியமாக உள்ளனர்.




0 comment(s) to... “திருவரங்குளத்தைச் சேர்ந்த பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் மூன்று குழந்தைகள் ”