இன்னும் 30 வருடத்தில் பிள்ளைகள் கருவில் வளராது. வெளியே வைத்து வளர்க்க முடியும் என்ற நிலை தோன்றும் !

Posted August 17, 2014 by Adiraivanavil in Labels:
10 மாதம் வயிற்றில் சுமந்து பிள்ளைகளை பெறவேண்டுமா ? என்று உலகில் உள்ள பல பெண்கள் கேள்வி கேட்டவண்ணம் உள்ளார்கள். பிள்ளையை சுமக்கும் இந்த 10 மாதமும் அவர்கள் கஷ்டப்படுவதாகவும் வேலைக்கு செல்ல முடிவதில்லை என்றும் கூறப்படுகிறது. அதனை விட மேலைத்தேய நாடுகளில்
உள்ள பெண்களால் சிகரெட் மற்றும் தண்ணியடிக்க முடியவில்லை என்பது ஒரு பெரும் குறையாக உள்ளதாம். கர்பம் தரித்த அந்த 10 மாதங்களில் அவர்களால் தண்ணியடிக்க மற்றும் சிகரெட் அடிக்க முடியாது. இதுவே அவர்களுக்கு பெரும் பிரச்சனையாக இருக்கிறது என்று அவர்கள் கூறுகிறார்கள். இவை அனைத்துக்கும் தீர்வு கிட்டுவது போல, ஒரு கண்டுபிடிப்பை விஞ்ஞானிகள் தெரிவிக்க உள்ளார்கள்.
அது என்னவென்றால் இன்னும் சில வருடங்களில், பிள்ளை கறுவுற்ற பின்னர் அக் கருவை அப்படியே எடுத்து வயிற்றுக்கு வெளியே வைத்து வளர்க்க முடியும் என்பது தான். இதனால் தாய் மார்கள் வேலைக்கு செல்லலாம். பிரசவ மரணங்களை தடுக்கலாம். அதிலும் குறிப்பாக கருவுற்ற பின்னரும் அவர்கள் தண்ணியும் அடிக்கலாம். இவை அனைத்திற்கும் இதுவே முடிவு என்கிறார்கள். இது கட்டாயமாக செய்யவேண்டிய அவசியம் அல்ல. பணம் படைத்தவர்கள், மற்றும் பிரசவ சிக்கல் உடையவர்கள் இதனைச் செய்துகொள்ளலாம் என்று விஞ்ஞானிகள் தற்போது தெரிவித்துள்ளார்கள். இது 100 வீதம் பாதுகாப்பு உடையது. இவை மக்கள் பாவனைக்கு வரும்போது, வாடகை தாய் என்னும் மேட்டர் முடிவுக்கு வரும் என்று கூறுகிறார்கள்.


0 comment(s) to... “இன்னும் 30 வருடத்தில் பிள்ளைகள் கருவில் வளராது. வெளியே வைத்து வளர்க்க முடியும் என்ற நிலை தோன்றும் !”