நான்குகண்களுடன் பிறந்த விசித்திர குழந்தை! (படங்கள் இணைப்பு)

Posted August 09, 2014 by Adiraivanavil in Labels:

 பாகிஸ்தானில் அண்மையில் இரட்டை தலைகளுடன் கூடிய குழந்தை ஒன்று பிறந்துள்ளது. ஆசாத் ஐம்மு மற்றும் கஹ்மீர் தம்பதிகளுக்கு மூன்றாவதாக பிறந்த இக்குழந்தை மூச்சுத்திணறல் ஏற்பட்டு அவசர சிகிச்சைப்பிரிவில் வைக்கப்பட்டுள்ளது. குழந்தைக்கு
வாய் மூலம் பால் ஊட்டுவதற்கும் முடியாமல் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவ உலகில் இவ்வாறான அதிசய சம்பவங்கள் இடம்பெறுவது தற்போது காணப்படுகின்ற ஒரு வியடம் ஆகிலும்… குறித்த இந்தக்குழந்தைக்கு அவயங்கள் இரண்டு சோடிகளாக காணப்படுகின்றமை அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளார்கள்.நான்கு கண்கள் இரு மூக்குகள் இரு காதுகள் இரு வாய்கள் என விசித்திரமாக காணப்படுகிறது இந்தக்குழந்தை. 3.2 கிலோ எடையுடன் பிறந்த இக்குழந்தை பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. தமது வைத்தியசாலை வரலாற்றில் இப்படி ஒரு குழந்தை பிறந்துள்ளமை இதுவே முதல் தடவை என குறித்த வைத்தியசாலையில் வைத்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள். தற்போது குழாய் மூலம் குழந்தைக்கு பாலூட்டப்பட்டு அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



0 comment(s) to... “ நான்குகண்களுடன் பிறந்த விசித்திர குழந்தை! (படங்கள் இணைப்பு) ”