அதிராம்பட்டினம் காமாட்சியம்மன் கோயிலில் பந்தகால் முகூர்த்தம்

Posted August 28, 2014 by Adiraivanavil in Labels:

அதிராம்பட்டினம், : அதிராம்பட்டினம் காமாட்சியம்மன் கோயில் மகா உற்சவ திருவிழாவை முன்னிட்டு பந்தகால் முகூர்த்தம் நடைபெற்றது.
அதிராம்பட்டினம் யாதவர் தெரு,
ஸ்ரீ காமாட்சியம்மன் கோவிலில் மஹா உற்சவ திருவிழா வருகிற 31ந்தேதி நடைபெறுகிறது. திருவிழாவையொட்டி பந்தகால் முகூர்த்தம் நேற்று நடைபெற்றது. அன்று முதல் தினந்தோறும் மண்டகப்படி நடைபெற்று வருகிறது. 31ம்தேதி ஞாயிற்றுக்கிழமை காலை சக்தி கரகம் எடுத்தலும், மதியம் பக்தர்களுக்கு அன்னதானமும், மாலை பால்குடம் எடுத்து வந்து அம்மனுக்கு பாலாபிஷேகம் நடைபெறுகிறது. திருவிழாவுக்கான ஏற்பாடுகளை யாதவர் தெரு கிராம வாசிகள் செய்து வருகின்றனர்.



0 comment(s) to... “அதிராம்பட்டினம் காமாட்சியம்மன் கோயிலில் பந்தகால் முகூர்த்தம்”