உரிமையாளரின் புகைப் பழக்கத்துக்கு அடிமை: தம் அடிக்காமல் தூங்க மறுக்கும் சீன நாய்
Posted July 04, 2014 by Adiraivanavil in
சீனாவின் ஹீலோங்ஜியாங் மாகாணத்தில் உள்ள அண்டா பகுதியை சேர்ந்த லியு என்பவர் கடந்த ஓராண்டுக்கு முன்னர் மெயா என்ற பெயருள்ள ஒரு வயது நாயை தத்தெடுத்தார்.தொடர்ந்து சிகரெட் பிடிக்கும் பழக்கமுடைய லியுவின் அருகாமையில் இருந்தே வளர்ந்த மெயாவுக்கும் புகைப் பிடிக்கும் பழக்கம் தொற்றிக் கொண்டது. சுமார் ஓராண்டு காலமாக லியுவுடன் சிகரெட் பிடிப்பதில் ‘கம்பெனி’ கொடுத்து வரும் மெயாவுக்கு இப்போதெல்லாம் படுக்கைக்கு போகும் முன்னர் ஒரு ‘தம்’ அடிக்காமல் தூக்கமே பிடிப்பதில்லை.
குறிப்பாக, லியுவுக்கு பிடித்தமான பிராண்ட் ஆன ‘யுக்ஸி’ சிக்ரெட்டே மெயாவின் பிரதான தேர்வாக உள்ளது. அந்த அளவுக்கு சிகரெட்டுக்கு அடிமையாகி விட்ட மெயாவின் ஆரோக்கியத்தைப் பற்றி கலைப்படும் லியு, விரைவில் இந்த பழக்கத்தில் இருந்து தனது செல்ல நாயை விடுவிக்க என்ன வழி? என்று ஆலோசித்து வருகிறார்.
0 comment(s) to... “உரிமையாளரின் புகைப் பழக்கத்துக்கு அடிமை: தம் அடிக்காமல் தூங்க மறுக்கும் சீன நாய்”