அதிராம்பட்டினம் கடல்பகுதியில் லீகி கனவாய் மீன்கள் வரத்து அதிகரிப்பு

Posted July 01, 2014 by Adiraivanavil in Labels: ,
அதிராம்பட்டினம் கடற்பகுதியில் மருத்துவகுணம்கொண்ட லீகி கனவாய் மீன்கள் வரத்து அதிகரித்துள்ளது. பொதுவாக கனவாய் மீன்களில் ஓட்டுக்கனவாய் அழுக்குக்கனவாய் லீகி கனவாய் சங்குகனவாய் என 10க்கு மேற்பட்ட வகைகள் உள்ளன.இதில் ஓட்டுக்கனவாய் சங்குகனவாய் அழுக்குக்கனவாய் ஆகியவை தஞ்சை கடற்பகுதியில் கிடைக்கின்றன லீகி கனவாய் தஞ்சை கடல் பகுதியில் கிடைப்பது அரிது பெரும்பாலும் கனவாய் மீன்கள் மழை காலங்களில் தான் உற்பத்தியாகும் இந்நிலையில் சமீப காலங்களில் கடல் பகுதியில் மழை பெய்து வருவதால் கனவாய் மீன்கள் உற்பத்தியாகி தற்போது அதிகம் பிடிபடுகிறது இதுபற்றி மீனவர் மாரிமுத்தான் என்பவர் கூறுகையில் லீகி கனவாய் மீன்களைவிட அதிக எடைகொண்டது ஒரு கனவாய் மீன் ஒரு கிலோ முதல் ஒன்றரை கிலோ வரை எடையுள்ளதாக இருக்கும் இது கால்சியம் மற்றும் இரும்பு சத்துள்ளது மூலவியாதிகள் மூட்டுவலி மற்றும் இரத்தசோகை ஆகிய வியாதிகளை குணப்படுத்தக்கூடியது மற்ற வகை கனவாய்மீன்கள் கிலோ 120 முதல் 200 ரூபாய் விலைபோகும் ஆனால் லீகி கனவாய் கிலோ ஒன்றுக்கு 400 ரூபாய்க்கு விலை போகிறது இது சிங்கப்பூர் மலேசியா உள்ளிட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது என்றார்.  அதிரைநியூஸ்வேல்டு



 



0 comment(s) to... “அதிராம்பட்டினம் கடல்பகுதியில் லீகி கனவாய் மீன்கள் வரத்து அதிகரிப்பு”