அதிரையில் முதல்வர் உடல்நலம்பெற அதிமுக சார்பில் செல்லியம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடு
Posted October 16, 2016 by Adiraivanavil in Labels: அதிரை வானவில்
உடல்நலக்குறைவால் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முதலமைச்சர் ஜெயலலிதா விரைவில் நலம் பெற தமிழகம் முழுவதும் அதிமுக தொண்டர்கள் கோயில்களில் வழிபாடுகள் செய்தனர். இதனைதொடர்ந்து தமிழக முதல்வர் பூரண நலம்வேண்டி அதிராம்பட்டினத்தில் ; அதிமுக நகர எம்.ஜீ.ஆர் இளைஞர் அணி சார்பில் அதிராம்பட்டினம் செல்லியம்மன் கோயிலில் சிறப்பு அபிஷேகங்களும், யாகங்களும் நடத்தப்பட்டன. அதிராம்பட்டினம் நகர எம்.ஜீ.ஆர் இளைஞர் அணி நகர செயலாளர் சிவக்குமார் தஞ்சை தெற்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு இணை செயலாளர் சேதுராமன், அதிரை பேரூர் செயலாளர் பிச்சை, அசோக், கூட்டுறவு வங்கி தலைவர் காமராஜ் மற்றும் ஏராளமான அதிமுகவினர் கலந்து கொண்டனர்.
0 comment(s) to... “அதிரையில் முதல்வர் உடல்நலம்பெற அதிமுக சார்பில் செல்லியம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடு”