இன்றும், நாளையும் பலத்த மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்
Posted December 04, 2015 by Adiraivanavil in Labels: தஞ்சை
டெல்டா மாவட்டத்தில் இன்றும், நாளையும் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது.
குறிப்பாக சென்னையை மழை புரட்டி போட்டு விட்டது. டெல்டா மாவட்டங்களிலும் மழை பெய்கிறது. குறிப்பாக நாகை மாவட்டத்தில் நேற்று முன்தினம் முதல் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் வீடுகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.
தஞ்சையில் நேற்று இரவு முதல் மீண்டும் மழை பெய்கிறது. திருவாரூர் மாவட்டத்தில் விட்டு, விட்டு மழை தொடர்கிறது.
இந்த நிலையில் டெல்டா மாவட்டத்தில் இன்றும், நாளையும் பலத்த மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கரைக்கால் பகுதியிலும் மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. 5–ந் தேதிக்கு பிறகு மழை படிப்படியாக குறையும் எனவும் வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளது.
பலத்த மழை எச்சரிக்கையால் டெல்டா விவசாயிகள் கலக்கத்தில் உள்ளனர்.
0 comment(s) to... “இன்றும், நாளையும் பலத்த மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்”