த.மு.மு.கவினர் 3 நாள் நிலவேம்பு கசாயம் வழங்கும் முகாம்.

Posted December 03, 2015 by Adiraivanavil in Labels:
 முத்துப்பேட்டை அடுத்த எடையூர் கிராமத்தில் த.மு.மு.க கிளை சார்பில் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கும் முகாம் கடந்த 3 நாட்களாக நடைபெற்றது. முகாமிற்கு ஒன்றிய செயலாளர் வகாப் தலைமை வகித்தார். மனித நேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் வக்கில் தீன் முகம்மது முகாமை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் கிளை செயலாளர் தவ்லத் உட்பட பலரும் கலந்துக் கொண்டனர். இதில் கடந்த 3 நாட்களும் தினமும் நூற்றுக்கணக்கானப் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது. 

படம் செய்தி:நிருபர்-மு.முகைதீன்பிச்சை முத்துப்பேட்டை


0 comment(s) to... “த.மு.மு.கவினர் 3 நாள் நிலவேம்பு கசாயம் வழங்கும் முகாம்.”