அதிராம்பட்டினத்தில் பலத்த சூரைக்காற்று வீசிவருவதால் மீனவர்கள் கடலுக்குச்செல்லவில்லை

Posted June 08, 2016 by Adiraivanavil in Labels:
அதிராம்பட்டினம் கடற்பகுதியில் பலத்த சூரைக்காற்று வீசிவருவதால் பெரும்பாலான நாட்டுப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் செல்லவில்லை, அதிராம்பட்டினம் பகுதியில் கடந்த சில நாட்களாக மழை பெய்துவந்தது. இருந்தும் காற்றின் வேகம் குறைந்து காணப்பட்டதால் நாட்டுப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் சென்று வந்தனர். இந்நிலையில் நேற்றும் நேற்று முன்தினமும் மழை அதிகமாக பெய்யவில்லை, இருந்தபோதும் இரண்டு தினங்களாக கடலில் பலத்த சூரைக்காற்று வீசிவருகிறது. மேலும் அலைகள் வழக்கத்தைவிட இரண்டு மடங்கு அதிக அளவு உயரம் எழுகிறது. இதனால் விசைப்படகு மீனவர்கள் தவிர்த்து பெரும்பாலான நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை, மேலும் மீன்பிடிக்க கடலுக்குச் சென்ற ஒரு சில நாட்டுப்படகு ; மீனவர்கள் காற்றின் வேகம் தாக்குப்பிடிக்காமல் கரை திரும்பினர். இதனையடுத்து அதிராம்பட்டினம் கரையூர்தெரு, காந்திநகர், ஆறுமுககிட்டங்கித்தெரு, ஏரிப்புறக்கரை, கீழத்தோட்டம், வெளிவயல், கொள்ளுக்காடு, புதுப்பட்டினம், மல்லிப்பட்டினம், மனோராசின்னமனை, சேதுபாவாசத்திரம் உள்ளிட்ட தஞ்சை கடற்பகுதியில் உள்ள 1000க்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகள் மூலம் மீன்பிடிக்கும் 4000க்கும் அதிகமான மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குசெல்லவில்லை இது பற்றி அதிராம்பட்டினம் ஏரிப்புறக்கரை மீனவர் வேலாயுதம் கூறுகையில் தஞ்சை கடற்பகுதியில் இரண்டு தினங்களாக கடலில் பலத்த காற்று தென்திசையிலிருந்து வடக்கு நோக்கி வீசிவருகிறது. அலைகள் அதிகளவில் உயரம் எழுவதோடு கடல் 200 மீட்டர் துரம் உள்வாங்கியும் உள்ளது இதனால் படகு கவிழ்ந்து விடுமோ என்ற அச்சத்துடன் நாங்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை என்றார்.



0 comment(s) to... “அதிராம்பட்டினத்தில் பலத்த சூரைக்காற்று வீசிவருவதால் மீனவர்கள் கடலுக்குச்செல்லவில்லை”